தமிழக அரசின் பொங்கல் பரிசை விமர்சித்து சமூகவலைதளங்களில் டிரோல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பாடலில் ‘ வெல்லம் உருகுதய்யா.. முருகா, விடியல் ஆட்சியிலே, பல்லி புதைத்திடவே, அவர்க்கு புளிதான் கிடைத்ததப்பா,” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெல்லம் உருகுதய்யா விடியல் ஆட்சியிலே… நியாயவிலைக் கடைகளில் விடியா அரசின் வடியும் வெல்லம்,” எனக்கு குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.