கேரளா, அலப்புழாவில் உள்ள வயலாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நந்து கிருஷ்ணா என்ற ஒரு ஸ்வயம்சேவகர், முஸ்லிம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பினரும் இவர்களின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக, இந்த அமைப்புகளை சேர்ந்த ஏழு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட பி.எப்.ஐ அமைப்பினரை யோகி ஆதித்தியநாத் அரசு கைது செய்து வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள கேரளாவில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களில் சமீபத்தில் யோகி, பங்கேற்றார். அப்போது, யோகி, ஹிந்துக்கள், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து அமைப்புகளுக்கு எதிராக பி.எப்.ஐ அமைப்பினர், எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோஷங்கள் எழுப்பி, போராட்டங்களில் ஈடுபட்டனர், வயலாரில் பேரணியும் நடத்தினர். இதனை கண்டித்து ஆர்.எஸ்.எஸ், ஹிந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது இந்த பயங்கரவாதிகள், கத்திகளால் அவர்களை தாக்கியுள்ளனர். இதனால் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.