ஸ்வராஜ் தூர்தர்ஷன் புதிய தொடர்

இந்நிகழ்வில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “இந்தத் தொடரின் மூலம் இளைஞர்கள் சுதந்திரத்தின் தியாகங்களை அறிய முடியும். சுதந்திரப் போராட்ட காலத்தில் போராளிகள். சுதந்திர போராட்ட வீரர்களின் அதிகம் அறியப்படாத கதைகள் தேசபக்தியை மேலும் தூண்டும். இளைஞர்கள் மற்றும் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பற்றி பெருமைப்படுவார்கள். இந்த ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’  நேரத்தில், புதிய பாரதத்தின் தோற்றம் காணப்பட்டு வருகிறது. முழு உலகமும் பாரதக் கொடியின் வலிமையை அங்கீகரிக்கிறது” என்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன், பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி மயங்க் குமார்அகர்வால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தொடர், ஆகஸ்ட் 14 ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒன்பது இந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படும்.