ஸ்வப்னா சுரேஷ் மனு

தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்,  ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி பினராயி விஜயன் அரசுக்கு எதிராக சதி செய்ததாக கேரள காவல்துறை தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், கேரள காவல்துறை என்னைப் பாதுகாக்குமா என்ற சந்தேகம் உள்ளாதால் காவல்துறை பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் நீதிபதி முன்பு அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா மற்றும் மகள் வீணா ஆகியோர் கரன்சி மற்றும் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி போராட்டங்களைத் தொடங்கியுள்ளன. தொலைக்காட்சிகளும் இந்தப் பிரச்னையை  பரபரப்பாக விவாதித்து வருவதால் இது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.