ஸ்வப்னா சுரேஷ் புதிய குற்றச்சாட்டு

கேரள முதல்வர் விஜயன் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், ஷார்ஜா ஆட்சியாளரின் மாநில பயணத்தின் போது மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதாக மீண்டும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி ஷார்ஜா ஆட்சியாளரின் பயணத்திட்டம் மாற்றப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் ஆகியோரின் உத்தரவின்படி அவரது பயணத்திட்டம் தலைநகருக்கு மாற்றப்பட்டது. அவர் முன்னதாக கோழிக்கோடு வரத் திட்டமிடப்பட்டிருந்தார். அதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் முதல்வரின் உத்தரவின் பேரில் மாற்றப்பட்ட திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி, கிளிஃப் ஹவுஸ் வருகை குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. நெறிமுறைகளை மீறி, நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் குற்றத்தை முதல்வர் செய்தார். இவை அனைத்தும் வீணா விஜயன் நடத்தும் தகவல் தொழில்நுட்பத்துறை வியாபாரத்திற்காக செய்யப்பட்டது. இதற்கிடையில், கிளிஃப் ஹவுஸில் முதல்வரின் மனைவி கமலா விஜயன், நளினி நெட்டோ ஐ.ஏ.எஸ் மற்றும் எனக்கு இடையே ரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது. வீணாவின் வியாபாரம் செழிக்க எவ்வளவு தங்கம் பரிசாக வழங்க வேண்டும்? என்று கமலா விஜயன் கேட்டார்’ என ஸ்வப்னா குற்றம் சாட்டியுள்ளார்.