கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், ‘முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கருடன் எனக்கு தனிப்பட்ட நெருக்கம் இருந்தது.சிவசங்கர் எனது வீட்டிற்கு தினசரி வருவார்.நாங்கள் இருவரும் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு துபாயில் குடியேற விரும்பினோம்’ என ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முன்னதாக, ஜாமீனில் வெளிவந்திருந்த சிவசங்கர் எழுதிய தனது சுயசரிதையில், தனக்கு தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து எதுவும் தெரியாது, எங்களுக்குள் நெருங்கிய தொடர்பு ஏதுமில்லை, ஸ்வப்னா சுரேஷ் தன்னை ஏமாற்றிவிட்டார் என குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.