எதிர்காலத்தில் புயல்களின் தாக்கத்தைக் குறைக்க, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தங்களது மாநில அரசு 15 கோடி சதுப்பு நில மரங்களை நடவு செய்யும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார். கடந்த மே மாதத்தில் தாக்கிய புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்தன. கொல்கத்தாவில் மட்டும் 5,000 மரங்கள் வேரோடு சாய்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.