சூர்ய நூதன் புதுமை அடுப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஒரு நிலையான, சார்ஜ் செய்து பயன்படுத்தத்தக்க, வீட்டினுள் வைத்து பயன்படுத்தத்தக்க, காப்புரிமை பெற்ற”சூர்ய நூதன்” என்ற சூரிய சமையல் அடுப்பை அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை அடுப்பை வாங்கும் செலவைத்தவிர வேறு செலவுகள் இதில் இல்லை. கேஸ் வாங்கத் தேவையில்லை, மின்சாரம் செலவில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாசு ஏற்படுத்தாத இந்த அடுப்பை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதனை அறிமுகம் செய்துவைத்தார். மேலும் அவரது இல்லத்தில் நடந்த இந்த அறிமுக நிகழ்ச்சியில், சூர்ய நூதன் அடுப்பில் சமைத்த முழுமையான மூன்று வேளை உணவும் தயாரித்து வழங்கப்பட்டது. இதற்கான பிரத்தியேக சோலார் பேனல் மூலம் தயாராகும் சூரிய ஆற்றல் மின் கடத்திகள் மூலம் வீட்டிற்குள் உள்ளஅடுப்பில் வெப்பமாக மாற்றப்படுகிறது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் பகல் நேர சமையல் தேவைகளை மட்டுமல்லாமல் இரவு உணவையும் இதில் உள்ள ஆற்றல் மூலம் தயாரிக்க முடியும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். சூரிய ஒளி மிகக்குறைவாக கிடைக்கும் லடாக் உட்பட நாட்டின் சுமார் 60 இடங்களில் இது சோதனை செய்யப்பட்டுள்ளது. மேகமூட்டமான நாட்களில் தேவைப்பட்டால் மின்சாரத்திலும் இதனை இயக்கமுடியும். அடுப்பின் விலை தற்போது ரூ.18,000 முதல் ரூ. 30,000 வரை ஆகிறது. ஆனால் உற்பத்தி அதிகரிக்கும்போதும் மற்றும் மத்திய மாநில அரசுகளின் நிதி ஆதரவு கிடைக்கும்போதும் இதன் விலை இன்னும் குறையும். இதன் வணிக ரீதியாக தொடங்குவதற்கு 3 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இது, எரிபொருளுக்கான நமது செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்கும், நாட்டின் தற்சார்புக்கு மேலும் வலுசேர்க்கும்.