சூரிய நமஸ்கார் – சூரியனுக்கு வழிபாடு

சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக 2022 ஜனவரி 14 அன்று உலகளாவிய சூரிய நமஸ்கார நிகழ்வுக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொள்ளும் மக்களின் பேராதரவினால், 75 லட்சம் பேர் என்ற இலக்கையும் தாண்டி தற்போது ஒரு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று நம்பப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால், ‘பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சியை ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது. கொரோனா அதிகரிக்கும் தற்போதைய சூழலில் மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் பொருத்தமானது. சூரிய நமஸ்காரம் உடல் திறனையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பாரதம், வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி யோகா பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் இந்த உலகளாவிய நிகழ்ச்சியில் பங்கேற்கும். முக்கியப் பிரமுகர்கள், விளையாட்டு ஆளுமைகள், வீடியோ செய்திகள் மூலம் சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்துவார்கள். இந்த நிகழ்ச்சியில் 75 லட்சம் பேர் பங்கேற்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால் பதிவையும், ஏற்பாடுகளையும் காணும்போது இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.