கான்பூரில் வெள்ளிகிழமை தொழுகையை முடித்து மசூதிகளில் இருந்து வெளிவந்த முஸ்லிம்கள் பலர், கல்லெறிதல், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு, பொதுமக்கள், கடைகள் மீது தாக்குதல் என வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்களை சி.சி.டி.வி. காமிரா பதிவுகளைக் கொண்டு காவல்துறை கைது செய்து வருகிறது. இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்தின் போது பெட்ரோல் குண்டு வீசுவதற்காக பாட்டிகளில் பெட்ரோல் வழங்கிய பெட்ரோல் பங்கின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேடப்பட்டு வருபவர்களின் படங்களை கான்பூர் உட்பட பல முக்கிய நகரங்களில் பெரிய பிளெக்ஸ் பேனர்களில் வெளியிட்டுள்ளது காவல்துறை. இவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுள்ளது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சரணடைந்து வருகின்றனர்.