தமிழக தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், உச்சநீதிமன்றத்துக்கு ஏற்கனவே இருந்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ளவர்களும் தி.மு.கவின் பல வழக்குகள் ஆஜராகியுள்ளவர்களுமான அரிஸ்டாட்டில், குமணன் ஆகியோர் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குற்றம் சார்ந்த வழக்குகளையும், மற்றொருவர் சிவில் வழக்குகளையும் பார்த்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்களாக ஏற்கெனவே இருந்தவர்களான எம்.யோகேஷ் கன்னா, டி.ஆர்.பி.சிவக்குமார், பி.விநோத் கன்னா ஆகியோரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.