ஒரு நேரடி விவாத நிகழ்ச்சியில் முகமதுவின் வாழ்க்கையைப் பற்றி பேசியதற்காக, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்களைப் பெற்று வருகிறார் பா.ஜ.கவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மா. இவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன. உள்ளூரில் மட்டுமல்ல பல முஸ்லிம் நாடுகளும் இதை சாக்காகக் கொண்டு மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அரசை மிரட்டின.
இதற்கு காரணமாக, சர்வதேச கச்சா எண்ணெய் அரசியல் இருப்பதாகவும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் நாடுகளை தூண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இச்சூழலில், நெதர்லாந்தின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான கிரேட் வைல்டர்ஸ், நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். நூபுர் ஷர்மாவுவின் கருத்துக்களை கண்டித்ததற்காக இஸ்லாமிய நாடுகளை சாடியுள்ளார்.
‘நூபுர் ஷர்மா, முகமதுவைப் பற்றிய உண்மையை மட்டுமே பேசினார். நபிகள் நாயகத்தைப் பற்றி உண்மையைப் பேசியதற்காக முஸ்லிம் நாடுகள் கோபப்படுவது நகைப்புக்குரியது. அவர்களிடம் பாரதம் ஏன் மன்னிப்பு கேட்கிறது? முஸ்லிம் நாடுகள் பாரதத்தை பயமுறுத்த வேண்டாம். சமாதானப்படுத்துவது ஒருபோதும் வேலை செய்யாது; மாறாக, அது விஷயங்களை மேலும் மோசமாக்கும். முகமதுவைப் பற்றி உண்மையைப் பேசிய நுபுர் ஷர்மாவை பாரத நாட்டினர் பாதுகாக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர், நூபுர் ஷர்மாவின் கருத்துக்களை 85 வினாடிகள் கொண்ட வீடியோவாக திரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து நூபுர் ஷர்மாவுக்கு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின என கூறப்படும் நிலையில், இதுகுறித்து டெல்லி காவல்துறை ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நூபுர் ஷர்மா, தனது கருத்துக்களுக்காக டுவிட்டரில் மன்னிப்பும் கேட்டுள்ளார். யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்று கூறியுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது. இதில், விசித்திரமாக, தேசம் முழுவதும் ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகள், சிவலிங்கம் உள்ளிட்ட இறை உருவங்கள் குறித்து தவறாக பேசிய பல மாற்று மதத்தவர்கள் மீது தமிழக அரசு உட்பட எந்த மாநில அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் ஹிந்துக்கள் சிந்தித்துணர வேண்டும்.