‘கொரோனா தொற்று காரணமாக இளம் வயதினர், குடும்பத்தில் சம்பளம் ஈட்டக்கூடிய முதன்மை நபர்கள் பலர் உயிரிழந்து வரும் சூழலில், அவர்களின் திடீர் மறைவால் அவர்களது குடும்பம் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் நெருக்கடியை சந்திக்கின்றன. இதனைக் கவனத்தில் கொண்டு, கொரோனாவால் இறந்த எங்களது நிறுவன ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பளத் தொகையை வழங்குவோம். அதுமட்டுமின்றி அவர்களின் குழந்தைகளுடைய கல்விக் கட்டணத்தை அவர்கள் பட்டப்படிப்பு வரை செலுத்துவோம். அலுவலக குழு காப்பீட்டை தாண்டி இந்த உதவியானது இருக்கும்’ என சன் பார்மா அறிவித்துள்ளது.