விக்கிப்பீடியாவுக்கு சம்மன்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தான் வீரர் ஒருவரின் கேட்ச்சை பிடிக்காமல் தவறவிட்டார். இதுவே இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைய காரணம் என தெரிவித்து, சமூக ஊடகத்தில் சிலர் அவரை கடுமையாக தாக்கி பேசினர். அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், இந்தியா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 15 நிமிடத்தில் இந்தப் பதிவுகள் சரிசெய்யப்பட்டன. இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், அவரை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி தகவல் வெளியிட்டு போலியான செய்தியை எப்படி பதிவிட முடிந்தது? இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் விக்கிப்பீடியா நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.