பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகப்பு குறைபாட்டை கண்டித்தும் பிரதமருக்கு ஆதரவாகவும் கருத்தை பதிவிட்டிருந்தார் பிரபல பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால். இதற்கு எதிராகவும், சாய்னாவை அவமானப்படுத்தும் விதமாகவும் பாலியல் ரீதியாக அவதூறான கருத்தை நடிகர் சித்தார்த் பதிவிட்டார். இதற்கு தேசமெங்கும் கடும் கண்டனம் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மகாராஷ்டிர காவல்துறையை அறிவுறுத்தியது. ஹைதராபாத் காவல்துறையிலும் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் சித்தார்த்துக்கு எதிரான இரண்டு புகார்களில் அவரது அறிக்கையை பதிவு செய்ய சென்னை காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இவை அவதூறு வழக்கு மட்டுமே, கிரிமினல் வழக்கு அல்ல. அதனால், சித்தார்த் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.