ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிற்கு, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர் வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் தனது பரூக் அப்துல்லா தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சங்கத்தில் பணியாளர்களை நியமித்தது, பி.சி.சி.ஐ நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட நிதி முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு முன் பல முறை இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.