திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது பட்ட மேற்படிப்பு படிக்கும் பல மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பிரபல தமிழ் செய்தித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அது கிறிஸ்தவ கல்லூரி என்பதால், வழக்கம்போல கல்லூரியின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ‘இன்னோர் பாலியல் தொல்லை.. மாணவிகள் புகாரை அடுத்து தமிழ்த்துறை பேராசியர் பணியிடை நீக்கம், விசாரணை தீவிரம்..’ என்ற வகையில் அந்நிகழ்ச்சியின் தலைப்பு இருந்தது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மகாலிங்கம் பொன்னுசாமி, இதனை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பதில் அளித்துள்ள பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், ‘PSBB-ன்னா பெயர் போடுவீங்க, கிறிஸ்தவ பள்ளி, கல்லூரின்னா பெயர் போட மாட்டீங்களா?’ என பத்திரிக்கையாளர் மகாலிங்கத்தை கேள்வி கேட்டுள்ளார்.