தற்கொலை தீர்வல்ல

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் மாணவ மாணவியருக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதில் அவர், ‘மாணவர்களே உங்கள் கனவுகளை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காவிட்டால் உலகம் ஒன்றும் இருண்டுவிடப் போவதில்லை. விடாமுயற்சியும் திறமையும் இருந்தால் ஏழைக்கும் வெற்றி நிச்சயம். தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரைகளை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்க வேண்டாம். உங்களால் தேர்ச்சி பெற முடியாவிட்டால் உங்கள் பயிற்சி, தயாராகும் முறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்திடுங்கள். உங்களை நீங்களே நேசிக்கத் துவங்குங்கள். புத்தகங்களை வாசியுங்கள். பெரியவர்களிடம் பேசுங்கள், அவர்கள் அறிவுரைகளை கேட்டு நடந்திடுங்கள். தேர்வுகளை கடப்பது எப்படி என யோசிக்க வேண்டும். படிப்பின் மீது என்றும் பிடிப்போடு இருந்திடுங்கள். நாளைய உலகம் உங்களுடையது’ என்று பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.