வெற்றி எனது இலக்கு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நேற்று சோம்நாத் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் பிரதமர் நரேநந்திர மோடி. வெராவல் தொகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “பா.ஜ.க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றி பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதை நீங்கள் எனக்காக செய்வீர்களா? இந்த 4 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவர்கள் சட்டப்பேரவைக்கு செல்வதை உறுதி செய்யுங்கள். இந்த முறை எனது இலக்கு எல்லா வாக்குச்சாவடிகளிலும் பா.ஜ.கவே வெற்றி பெற வேண்டும் என்பதே” என்றார்.