பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள TOI-1231 b என்ற புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட்’ வழியாக இக்கோள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘இந்த புதிய கோள் பார்ப்பதற்கு அச்சு அசல் நெப்டியூனை போல உள்ளது. பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது. இது ஒவ்வொரு 24.3 நாட்களுக்கு ஒரு முறை அதன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இந்த கோளில் நீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைவிட அதிக குளர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்கலாம். பூமியில் நிலவும் சீதோஷண நிலை இந்த கோளில் நிலவ வாய்ப்புள்ளதையும் மறுப்பதற்கில்லை. கணிசமான வளிமண்டலத்தால் சூழப்பட்டிருக்கலாம். வரும் காலங்களில் இந்தக் கொள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளப்படும்’ என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.