இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2022ல் நடந்த ஹிந்து எதிர்ப்பு வன்முறைகள் நடைபெற்றது. இதில், லெய்செஸ்டரில் உள்ள ஹிந்துக்கள், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது காழ்ப்புணர்ச்சி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது குறித்து சுதந்திரமான மறுஆய்வு செய்ய செய்ய இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. லார்ட் (இயன்) ஆஸ்டினை தலைமையிலான ஒரு சுயாதீன நிபுணர் குழுவை, சமூகங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் கோவ் நியமித்துள்ளார். பிரிட்டிஷ் அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, “லெய்செஸ்டரில் ஏற்பட்ட வன்முறையின்போது, அமைதியின்மையின் உச்சக்கட்டத்தின் போது, அரசு, உள்ளூர் காவல்துறை, லெய்செஸ்டர் சிட்டி கவுன்சில் மற்றும் பிற உள்ளூர் அமைப்புகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, நிலைமையை அமைதிப்படுத்தியது. லெய்செஸ்டர் நகரம் முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களைப் பாதுகாத்தது. லார்ட் (இயன்) ஆஸ்டின் தலைமையில் ஒரு சுயாதீன நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர் குழுவை வழிநடத்துவார். லார்ட் ஆஸ்டின் முன்னாள் வீட்டுவசதி மற்றும் திட்டமிடல் அமைச்சரராவார். இக்குழு, அமைதியின்மையின் தோற்றத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்வதில் பணியாற்றும். அமைதியின்மை காலத்தில் என்ன நடந்தது என ஆராயப்படும். அதற்கான காரணங்களின் பகுப்பாய்வு செய்யப்படும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இதேபோன்ற நிகழ்வுகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதற்கான நடைமுறை பரிந்துரைகளை வழங்கும். உள்நாட்டில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை வழங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.