உக்ரைனில் போர் பதற்றம் தொடங்கியது முதலே நம்நாட்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கிய மத்திய அரசு, ‘ஆபரேஷன் கங்கா’ என்ற நடவடிக்கையை தொடங்கி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக தன் நாட்டு மாணவர்களை மீட்டது. வழக்கம்போல இதிலும் தி.மு.கவின் ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரம் தேட முயற்சித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். நாடு திரும்பிய அனைத்து மாணவர்களும், “எங்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கு நன்றி” என்று கூறி தி.மு.கவினரின் மட்டமான முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில், பர்ஹூம் பானு. என்ற தி.மு.க. கவுன்சிலரின் மகன் முகமதுசையத் அஸ்ராரி உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘போலந்து நாட்டின் எல்லைக்கு சென்று அங்கு 3 நாட்கள் தங்கினோம். பிறகு பாரதத் தூதரகம் மூலம் டெல்லி வந்தடைந்தோம். நமது தேசியக் கொடிக்கு அங்கு மிகவும் மரியாதை உள்ளது. நாங்கள் நம் தேசியக் கொடியுடன் வந்ததால் அனைவரும் எங்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இது எங்களுக்கு கனவு நிறைவேறியது போல் உள்ளது’ என உண்மையைக் கூறி தி.மு.கவினரின் மணல் கோட்டையை உடைத்துவிட்டார்.