பாகிஸ்தானின் கொடியை எரித்து போராட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள், அவர்கள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்கள், உயிரிழப்புகள் ஆகியவற்றைக் கண்டித்து காஷ்மீர் முஸ்லிம்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சமீபத்தில், ஸ்ரீநகரில் வாழும் முஸ்லிம்கள் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லால் சௌக்கில், பாகிஸ்தானின் தேசியக் கொடியை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், ‘1989 காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்தின் போது நடந்தது போன்ற தாக்குதல்கள் தற்போது நடைபெறுகின்றன. இருப்பினும், இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் இருக்க மாநில நிர்வாகமும் மத்திய அரசும் முழு கவனம் செலுத்தி வருவதால் தாக்குதல்கள் தீவிரமடையவில்லை. இங்கு வாழும் ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட சமூகத்தினரின் மதங்கள் வேறாக இருந்தாலும், காஷ்மீரிகளிடையே மகத்தான தேசியவாத உணர்ச்சி உள்ளது’ என கூறினார்.