புகார் ஏற்பு ரசீதுக்கே போராட்டம்

இந்து முன்னணி பொறுப்பாளர் இளங்கோவின் முகநூல் பதிவில், ‘சென்னை, கொடுங்கையூர் நரசிம்ம ரெட்டியார் நகர், வரசித்தி வினாயகர் கோயில் வாசலில் மேடை, மைக் செட் போட்டு கிறிஸ்தவ நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என அப்பகுதி மக்கள் இந்து முன்னணி பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அனுமதி வாங்காமல் எப்படி மேடை போட்டார்கள் என அந்த இடத்திற்கு ஆய்வாளர் கிளம்பினார். காலையில் வாருங்கள் புகார் ஏற்பு ரசீது தருகிறேன் என்றவர், காலையில் சென்ற பொறுப்பாளர்களிடம் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இதோ அவர்கள் அனுமதி கேட்டு எழுதிக்கொடுத்த கடிதம் என ஒரு கடிதத்தை காண்பித்தார். அது எப்படி, முன்நாள் இரவு அனுமதி வாங்கவில்லை என்றவர் மறுநாள் அப்படியே மாற்றி பேசுகிறாரே என்று பார்த்தால் அந்த ஆய்வாளர் பெயர் ஜார்ஜ் மில்லர். மேலும் அவர், புகார் மனு ஏற்பு ரசீதும் கொடுக்க முடியாது, அந்த தெருவில் வசிப்பவர் யாராவது புகார் கொடுத்தால் பார்க்கலாம், உன்னால் முடிந்ததை பார் என அங்கிருந்த அதிகாரிகள் பேசினர். இதனையடுத்து, இந்து முன்னணியினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாரானார்கள். இந்த விவரம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு செல்லவே, உடனடியாக புகார் ஏற்பு ரசீது தரவும் முறையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதுவரை முடிந்ததை பார் என கூறிய ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும், இந்து முன்னணியினரிடம், நாமெல்லாம் ஒரே பகுதி, அடிக்கடி பார்க்க வேண்டும் என சொல்லி புகார் ஏற்பு ரசீதை கொடுத்தனர். அனுமதி பெறாமல் கூட்டம் நடத்திய கிறிஸ்தவர் மீது புகார் கொடுத்து அதற்கு புகார் ஏற்பு ரசீது பெறவே இத்தனை போராட்டம் நடத்த வேண்டியுள்ளது இந்த விடியல் ஆட்சியில். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் பிரச்சினை சம்பந்தமாக வண்ணாரப்பேட்டை அம்மன் கோயில் வாசலில் மேடை போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் முஸ்லிம்கள். அப்போதும் போராடித்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டி இருந்தது இந்த விடியா ஆட்சியில். இது தொடர்கதை ஆகியுள்ளது’ என தி.மு.க ஆட்சியில் ஹிந்துக்களின் வேதனையை பகிர்ந்துள்ளார்.