மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாய ஏஜெண்டுகளும் அவர்களது கூலியாட்களும் சில விவசாயிகளுடன் இணைந்து டெல்லி ஹரியானா எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் போராட்டக் களத்தை மாற்ற முடிவு செய்த அவர்கள், டெல்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரினர். இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து டெல்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக்களத்தை அவர்கள் மாற்றியுள்ளனர். பி.கே.யு விவசாய சங்கத் தலைவர் திகாயத் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் வந்து போராட்டத்தை தொடங்கினர். அங்கு காவலர்கள் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.