‘ஸ்ட்ரிங்’ என்ற ஒரு யூ டியூப் சேனலில் விவசாய போராட்டத்தின் பின்னணியில் உள்ள அமெரிக்க பணக்காரர் ஜார்ஜ் சோரஸ், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்டோரின் சதி, அதற்கு துணையாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு பத்திரிகைகள் போன்றவற்றை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில், விவசாய போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உண்மை பின்னணி குறித்த உண்மைகள் வெளியானதால் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை யூடியூப் நிறுவனம் திடீரென நீக்கிவிட்டது. யூ டியூப் நிறுவனத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை பலர் விமர்சித்தனர். அப்படி விமர்சித்தவர்களில் இடதுசாரி பத்திரிகையான ‘தி பிரிண்ட்’ பத்திரிகையின் ஆசிரியரான சேகர் குப்தாவும் ஒருவர். பின்னர் அந்த கட்டுரையை ‘தி பிரிண்ட்’ நீக்கிவிட்டது.