எந்த ஒரு வழக்கும் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதும், சி.பி.ஐ போன்ற விராசணை அமைப்புகளின் விசாரணையில் இருக்கும்போதும் அதற்கு அழுத்தம், நிர்பந்தம் கொடுக்கும் விதமாக, உண்மை அல்லது பொய் பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கு அனுமதி இல்லை என்கிறது சட்டம். ஆனால், தஞ்சாவூரில் மதமாற்ற நிர்பந்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் வழக்கு தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், அந்த வழக்கு விசாரணை தங்களுக்கு சாதகமாக அமையவேண்டும் என நிர்பந்திக்கும் விதமாக, பல்சமய நல்லிணக்கக் குழு என்ற ஒரு அமைப்பின் சார்பில் வரும் 5ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசும் அதன் காவல்துறையும் அனுமதி அளித்துள்ளதா, இந்த அமைப்பின் பின்னணி என்ன, யாரின் தூண்டுதலால் இந்த ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது, கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை காரணம் காட்டி மற்ற நிகழ்ச்சிகளை தடுக்கும் தி.மு.க அரசின் காவல்துறை இதனை மட்டும் எப்படி அனுமதிக்கிறது, இந்த சட்டவிரோத ஆர்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுவதில் வியப்பில்லை.