மமதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

மேற்கு வங்கம், ஒடிசாவை தாக்கிய யாஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மேற்கு வங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா விமான தளத்தில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் மமதா கலந்து கொள்ளவில்லை. மோடியை அரை மணிநேரம் காக்கவைத்து தாமதமாக சென்றதோடு, அவர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டுகூட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.இதனால், பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார் மமதா.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘யாஸ் சூறாவளி மக்களை பாதித்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே காலத்தின் தேவை.துரதிர்ஷ்டவசமாக, மமதா பானர்ஜி பொது நலனுக்கு மேலாக தனது ஆணவத்தை வைத்துள்ளார்.இன்றைய நடத்தை அதை பிரதிபலிக்கிறது’ என கூறியுள்ளார்.

பா.ஜ.க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, ‘மமதா பானர்ஜி, மேற்கு வங்க மக்களின் துன்பங்கள் குறித்து அறியும் உணர்ச்சியற்றவர் என்பதை மீண்டும் ஒரு முறை காட்டியுள்ளார்.கூட்டாட்சி நெறிமுறைகளில் இன்று ஒரு இருண்ட நாள்.அரசியலுக்கு ஒரு காலமும் ஆட்சிக்கு ஒரு காலமும் உள்ளது.மமதாவால் அதை புரிந்து கொள்ள முடியாது’ என்றுகூறினார்.இதனைத் தவிர பொதுமக்கள் பலரும்கூட மமதாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நம் தேசம் சீன தொற்றுடன் போராடிக்கொண்டுள்ளது. மாநிலம் புயலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இக்கணத்தில் நிவாரணம் கோருவது உகந்தது அல்ல. எங்கள் மாநில நிதியை வைத்து நிலைமையை கையாள முயற்சிப்போம் என ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்துள்ளார்.