ஏற்றுமதி மதிப்பு தொடருக்கு ஊக்கமளிக்கும் நோக்கில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா) தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்துடன் (என்.ஆர்.டி.சி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் நலனுக்கான செயல்பாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் இரு நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்காக போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், வேளாண் ஏற்றுமதி கொள்கையை நடைமுறைப்படுத்தவும், ஏற்றுமதி மதிப்பு சங்கிலியை வலுப்படுத்துவதும் ஆகும். சிறிய அளவிலான விவசாயிகளுக்கு பயனர் நட்பு மிக்க மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கருவிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், ஸ்டார்ட்அப் சூழலியலை வலுப்படுத்துதல் மற்றும் பரஸ்பர அறிவுப் பகிர்வு ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாகும்.