எஸ்.டி.பி.ஐ தலைவர் கைது

காங்கிரசை சேர்ந்த பட்டியலின எம்.எல்.ஏ. ஆர்.அகண்ட சீனிவாச மூர்த்தியின் மருமகனின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவையடுத்து கடந்த 2020 ஆகஸ்ட் 11 அன்று நள்ளிரவு பெங்களூருவில் முஸ்லிம் மதவெறி கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. இதில், கலவரத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 காவல்துறையினர் காயமடைந்தனர். இரண்டு காவல் நிலையங்கள், சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான அரசு, தனியார் வாகனங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பும் அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியும் இந்த அராஜகத்தில் ஈடுபட்டன. என்.ஐ.ஏ விசாரணையில், முன்னாள் மேயரும் காங்கிரஸ் தலைவருமான சம்பத் ராஜ், கார்ப்பரேட்டர் ராகிப் ஜாகிர், எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எப்.ஐ தலைவர்கள் 17 பேர் உட்பட கலவரத்தில் ஈடுபட்ட 138 பேர் கைது செய்யப்பட்டனர். 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இக்கலவரத்தில் 293 பேர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என தெரியவந்துள்ளது. தற்போது இவ்வழக்கில் முக்கிய சதிகாரரான எஸ்.டி.பி.ஐ தலைவர் சையத் அப்பாஸை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.