100 நாளில் மதமாற்றங்கள் நிறுத்தம்

கோவாவில் உள்ள பனாஜியில் பா.ஜ.க தலைமையிலான மாநில அரசின் 100 நாட்கள் செயல்பாடு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பா.ஜ.கவின் ‘இரட்டை இயந்திர அரசாங்கம்’ செய்த பணிகள் குறித்த சிறு புத்தகத்தை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “எங்கள் அரசு மத மாற்றத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள் மாநிலத்தில் ஹிந்துக்களின் மத மாற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடக்கும் மத மாற்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தை விசாரிக்க நாங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளோம். போர்ச்சுகீசிய காலத்தில் அழிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் பாரம்பரிய இடங்களை புனரமைக்க அரசு 20 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது’ என தெரிவித்தார்.