ஹிந்து திருமண ஊர்வலத்தில் கல் வீசி தாக்குதல்

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சிக்லியில் சைலானி நகர் பகுதியில், நடந்த ஒரு ஹிந்து திருமண ஊர்வலத்தின் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கற்களை வீசி தாக்குதல் நடந்த்தினர். ஊர்வலத்தின் போது டி.ஜே அமைப்பில் இசைக்கப்பட்ட ராமர் பாடல்களை எதிர்த்து அவர்கள் கற்களை வீசத் தொடங்கினர். மேலும், ஊர்வலத்தின் மீது கற்களை வீசுவதற்கு முன்பு ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷங்களை எழுப்பினர். இந்தத் தாக்குதலில், ஊர்வலத்தில் கலந்து கொண்ட 13 பேர் காயம் அடைந்தனர். நிலைமை மோசமாகி, இரு சமூகத்தினரும் மோதலில் ஈடுபட்டனர். கல் வீச்சு சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவலர்கள், லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர். காயமடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறை கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் 15 பேரைகைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஸ்வேதா மஹாலே, சிவசேனாவின் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மற்றும் புல்தானே எம்.பி பிரதாபராவ் ஜாதவ் ஆகியோர் வன்முறை நடந்த இடத்திற்குச் சென்று குடிமக்களிடம் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தனர். எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊர்வலத்தின் மீது கற்களை வீசுவதற்கு முன்பு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களால் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் எழுப்பப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்த கல் வீச்சில் டிஜே சேதப்படுத்தப்பட்டது. ஹிந்து மாலி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீது கற்கள் வீசப்பட்டது என கூறிய அவர், பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இது உண்மையாக இருந்தால், அவர்கள் பாரதத்தில் தங்கியிருக்கும்போது பாகிஸ்தானை ஆதரித்து பாராட்டுவதை நாங்கள் விட்டுவிட மாட்டோம்” என்று கூறினார்.