வயிறு எரியும் எதிர்கட்சிகள்

கொரோனாவுக்கான தடுப்பூசியால் மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் புகழ் உலக அளவில் வளர்வதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள், புரளியை கிளப்ப எத்தனித்தன. அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எழுப்பின. பிரதமர், உள்துறை அமைச்சர்கள் ஏன் அதனை போட்டுக்கொள்ளவில்லை என சந்தேகம் எழுப்பின. இந்நிலையில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்த பிறகு, நியதிகளுக்கு உட்பட்டு பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதற்கு அவர் அசாமின் பாரம்பரிய உடையான ‘காமோசா’வில் வந்திருந்தார். அவருக்கு ஊசியை போட்டது புதிச்சேரியை சேர்ந்த செவிலியரான ‘நிவேதா’. துணை செவிலியராக கேரளாவை சேர்ந்த ‘ரோசம்மா அனில்’ இருந்துள்ளனர். இது தற்போது, பா.ஜ.கவையும் பிரதமர் மோடியையும் எதிர்க்கும் பலருக்கும் வயிற்றெரிச்சலை உண்டாக்கியுள்ளது.