நியூயார்க்கில் பார்வதி தேவி சிலை

கும்பகோணம் அருகே தாண்டதோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்து காணாமல் போன பார்வதி தேவி சிலை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள  போன் ஹவுஸ் ஏல இல்லத்தில் உள்ளதை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோயிலில் இருந்து திருடப்பட்ட ஐந்து பஞ்சலோக சிலைகளில்12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பார்வதி தேவி சிலையும் ஒன்று. 1971ம் ஆண்டு இந்த சிலைகள் காணாமல் போனதாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 2019ம் ஆண்டு வாசு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். காணாமல்போன 53 வருடத்திற்கு பிறகு பார்வதி தேவி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.