மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாடு குஜராத்தில் நேற்று தொடங்கியது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சுபாஷ் சர்கார் மற்றும் மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாகவும், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், புவிசார் தகவல் மற்றும் விண்வெளி செயல்பாடுகளுக்கான தேசிய மையம், சர்வதேச வாகன வடிவமைப்பு மையம் ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிடுகின்றனர். இதில், தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், தமிழக அரசு அதனை புறக்கணித்துவிட்டது.