ஸ்டார்ட் அப் இந்தியா விழா

முதன்முதலாக ‘ஸ்டார்ட் அப் இந்தியா புதுமைகள் வார நிகழ்ச்சி’யை ஜனவரி 10 முதல் 16 வரை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை நடத்தவிருக்கிறது. நாட்டின் முன்னணி புதிய நிறுவனங்கள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டுதலை வழங்குபவர்கள், நிதி வழங்கும் அமைப்புகள், வங்கிகள், கொள்கைகளை உருவாக்குபவர்கள் மற்றும் இதர தேசிய, சர்வதேச பங்குதாரர்களை ஒன்றாக இணைப்பதே இந்த ஸ்டார்ட் அப் மற்றும் புதுமைகள் திருவிழாவின் முதன்மை நோக்கமாகும். காணொலி மூலம் நடக்கவிருக்கும் இந்த விழா பாரதத்தின் 75ம் ஆண்டு சுதந்திர ஆண்டைக் குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படுவதோடு, நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள தொழில்முனைதலையும் காட்சிப்படுத்தும். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் இந்த ஒரு வார விழாவில் பங்கேற்கும். நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் https://www.startupindiainnovationweek.in என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம். 40க்கும் அதிகமான யுனிகார்ன் எனப்படும் முன்னணி புதிய நிறுவனங்கள் 2021ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், 2021ம் வருடம் யுனிகார்ன்களின் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.