அடல் தொழில் ஊக்குவிப்பு மையம், அடல் சமுதாய புத்தாக்க மையம் ஆகிய இரண்டு முன்னணி திட்டங்களுக்கான விண்ணப்பங்களுக்கு நிதி ஆயோகின் அடல் புத்தாக்க இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. தொழில் ஊக்குவிப்பு அமைப்புகளின் தற்போதைய சூழலியலை விரிவுபடுத்துவதற்கும், உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான அணுகலை வழங்குவதற்கும் விண்ணப்பங்களுக்கான அழைப்பு இது. நாட்டில் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களை ஏற்படுத்தி, பாரதத்தில் புத்தாக்க சூழலியலை உருவாக்கி, ஆதரவளிப்பது, இந்த இரண்டு திட்டங்களின் நோக்கமாகும். விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன் ஐயர், ‘புத்தாக்கம் என்பது வளர்ச்சிக்கான ஈடு இணையற்ற உந்து சக்தியாக விளங்குவதோடு, சமூக தொழில்முனைவுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கு புத்தாக்க சூழலியலின் ஆதரவு இன்றியமையாதது. அதை நிறைவேற்றுவதில் அடல் புத்தாக்க இயக்கம் உறுதி பூண்டுள்ளது’ என்றார். அடல் தொழில் ஊக்குவிப்பு மையத்திற்கு விண்ணப்பிக்க https://aimapp2.aim.gov.in/aic2022/ என்ற மின் முகவரியையும், அடல் சமுதாய புத்தாக்க மையத்திற்கு https://acic.aim.gov.in/acic-application/ என்ற இணைப்பையும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தலாம்.