நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன (எஸ்.டி) மசோதா (2வது திருத்தம்) 2022’ஐ மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் கடந்த 15ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றினார். இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில்குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இதன் மீதான விவாதத்தில் பேசிய அர்ஜூன் முண்டா, “நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இவர்கள் தங்களது உரிமைகளை பெறாமல் கஷ்டங்களை சந்தித்தனர்.பழங்குடியினர் நலனுக்காக செயல்படும் மத்திய அரசு, இந்த முரண்பாடுகளை அகற்றி அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்துள்ளது” என்றார்.வழக்கம் போல தி.மு.கவினர் இதில் தங்களது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இதனை தங்கள் சாதனை முயற்சியாக காட்டிக்கொள்ள முயற்சிப்பது தனிக்கதை.