ஆன்மீக தூதரக உறவுகள்

மங்கோலிய புத்த பூர்ணிமா விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் 11 நாள் கண்காட்சிக்காக புத்தரின் நான்கு நினைவுச்சின்னங்களுடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மங்கோலியா பயணித்துள்ளார். பாரதமும் மங்கோலியாவும் சுமூகமான இருதரப்பு உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள். மங்கோலியா பாரதத்தை அதன் மூன்றாவது ஆன்மீக அண்டை நாடாக கருதுகிறது. இந்த ஆண்டு பாரதத்துக்கும் மங்கோலியாவிற்கும் இடையிலான தூதரக ரீதியிலான உறவுகளின் 67வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. மங்கோலியாவுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய நிகழ்வாக நிரூபிக்கப்பட்ட 2015ல் பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க மங்கோலியா பயணத்தையடுத்து இருதரப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. கொரோனா காலத்தின்போதிலும், துணைக் குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் என பல தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மங்கோலியா சென்றுள்ளனர். பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகளை பாரதம் மங்கோலியாவில் செயல்படுத்தி வருகிறது.