மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய நிதி அமைச்சகம் ரூ. 75 மதிப்பிலான சிறப்பு நாணயத்தை வெளியிட உள்ளது. இந்த நாணயம் 44 மி.மீ விட்டம் கொண்ட வட்ட வடிவில் 35 கிராம் எடையுடன் இருக்கும். இதன் பக்கவாட்டில் 200 வரி கோடுகளை கொண்டிருக்கும். வெள்ளி (50 சதவீதம்), தாமிரம் (40 சதவீதம்), நிக்கல் (5 சதவீதம்) மற்றும் துத்தநாகம் (5 சதவீதம்) ஆகியவற்றின் கலவையுடன் ஒரு பிரத்தியேக உலோக கலவையில் இந்த நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த நாணயத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் படத்துடன் ‘நாடாளுமன்ற வளாகம்’ என்ற வாசகம் இருக்கும். நாணயத்தின் கீழ் சுற்றில்ஆங்கிலத்தில் “Parliament Complex” என்ற வார்த்தையும், மேல் சுற்றில் தேவநாகரி எழுத்தில் “சன்சாத் சங்குல்” என்ற எழுத்தும் எழுதப்பட்டிருக்கும். இந்த நாணயத்தில் உள்ள சிங்க இலச்சினைக்குக் கீழே ரூபாய் சின்னம்த்துடன் அதன் 75 ரூபாய் மதிப்பு பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் மற்றொரு புறத்தின் மையத்தில் அசோக தூணின் சிங்க இலச்சினைக்குக் கீழ “சத்யமேவ ஜெயதே” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் இடது புறத்தில் தேவநாக்ரி எழுத்தில் “भारत” (பாரத்) என்ற வார்த்தையும் வலது புறத்தில் ஆங்கிலத்தில் “இந்தியா” என்ற வார்த்தையும் நாடாளுமன்ற வளாகத்தின் படத்திற்கு கீழே “2023” என்ற ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது.