மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டு வசதிக்கான (SWAMIH) சிறப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் 2019ம் ஆண்டு முதல் 4.58 லட்சம் யூனிட்களை உள்ளடக்கிய 1,600க்கும் மேற்பட்ட வீட்டு வசதித் திட்டங்கள் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளன. இவற்றை விரைவாக கட்டி முடிக்க மாற்று முதலீட்டு நிதி (AIF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியமைப்பு, 243 வீட்டுத் திட்டங்களுக்காக ரூ. 22,972 கோடியை அனுமதித்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிதி, நாடு முழுவதும் 1,41,045 வீடுகளை கட்டி முடிக்க உதவும். இந்த நிதிக்கு மத்திய அரசு, எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி, ஓய்வூதிய நிதிகள் மற்றும் பிற இறையாண்மை சொத்து நிதிகள் ஆகியவை இணைந்து ரூ. 25,000 கோடி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. SWAMIH திட்டத்தின் உதவியுடன் கடந்த ஆறு மாதங்களில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.