எல்லைக் கண்காணிப்பு சிறப்பு டுரோன்கள்

நமது நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட, நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த டுரோன்களை வடிவமைக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்.ஏ.எல்) ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஹெச்.ஏ.எல் அதிகாரிகள், “சுழலும் இறக்கைகள் கொண்ட இந்தவகை டுரோன்கள், ஏவுகணைகள், சென்சார் உள்பட 40 கிலோ எடை வரையிலான பொருட்களைத் தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்தவை. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவ வீரர்களில் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த டுரோன்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் சோதனை ஓட்டத்தை அடுத்த ஆண்டின் மத்தியில் நடந்த ஹெ.ச்.ஏஎல் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக 60 டுரோன்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாக்குதல், கண்காணிப்பு நோக்கத்தைத் தவிர, அத்தியாவசிய பொருள்களின் விநியோகம் உள்பட பல்வேறு பணிகளுக்கு இந்த டுரோன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இஸ்ரேலின் ஹெரான் டி.பி.டிரோன்களை அந்நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பாரதத்தில் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஹெச்.ஏ.எல் ஆராய்ந்து வருகிறது. நடுத்தர வடிவிலான ஹெரோன் டுரோன்கள், 35,000 அடி உயரத்தில் சுமார் 45 மணி நேரம் தடையின்றி பறக்கும் திறன்வாய்ந்தவை” என்று தெரிவித்தனர்.