ராகுலுக்கு பாடமெடுத்த சபாநாயகர்

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், பா.ஜ.க எம்பி கமலேஷ் பஸ்வானை குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பஸ்வான், தன்னை பேச அனுமதிக்கும்படி சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கோரினார். சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார். இந்நிலையில் பேச்சைத் தொடர்ந்த ராகுல், “சபாநாயகர் அவர்களே,. நான் ஒரு ஜனநாயகவாதி. அதனால், நான் அவரை பேச அனுமதிப்பேன்.” என்று கூறினார். இதனால் கோபமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘மக்களவையில் பேச அனுமதி அளிப்பது காங்கிரஸ் தலைவரின் உரிமையல்ல, நீங்கள் யாருக்கும் அனுமதி கொடுக்க முடியாது, இது எனது உரிமை’ என்று கூறினார். இதனால் நாடாளுமன்ற அவையில் ராகுல் சங்கடப்பட்டார். ‘இது ஒன்றும் ராகுலுக்கு புதிதல்ல, இப்படி நடப்பது இதுதான் முதல் முறையோ அல்லது கடைசி முறையோ அல்ல’ என்று நெட்டிசன்கள் வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.