விரைவில் கொடி பறக்கும்

புகழ்பெற்ற நடிகரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருணமூல் காங்கிரஸ் கட்சியின் 38 எம்.எல்.ஏக்கள் தற்போது பா.ஜ.கவுடன் தொடர்பில் உள்ளனர். இவர்களில் 21 பேர் என்னுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற சூழல் மேற்கு வங்கத்தில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். நாட்டில் 18 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. இன்னும் சில மாநிலங்களில் விரைவில் பா.ஜ.கவின் கொடி பறக்கும்” என தெரிவித்துள்ளார். திருணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சாந்தனு சென் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.