வங்கதேசத்தில் 2021ம் ஆண்டில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது வேண்டுமென்றே ஹனுமான் சிலையின் காலடியில் குர்ஆன் நகலை வைத்து ஹிந்து விரோத வன்முறையைத் திட்டமிட்டு அரங்கேற்றினான் முகமது இக்பால் ஹுசைன். இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அவனுக்கு டாக்கா நீதிமன்றம் 16 மாத சிறைத்தண்டனையை விதித்தது. மேலும், முகமது இக்பால் ஹுசைன் ஏற்கனவே 16 மாதங்கள் சிறையில் இருந்ததால், தண்டனையை முன்கூட்டியே அனுபவித்ததற்காக, வேறு எந்த வழக்கிலும் அவர் தேடப்படாத பட்சத்தில் அவரை விடுவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக இந்த சமூக விரோதியின் நடவடிக்கைகளால் நாட்டில் சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் தூண்டி விடப்பட்டன. பூஜை பந்தலில் இஸ்லாமிய புனித நூலை யாரும் வைக்கவில்லை என்றும், இந்தச் சம்பவம் வேண்டுமென்றே பிரச்சனையைத் தூண்டும் திட்டம் என்றும் ஹிந்து சமூகம் தொடார்ந்து வலியுறுத்தி வந்தது. எனினும், இந்த சம்பவத்தை காரணம் காட்டி, ஐந்து நாட்களுக்கும் மேலாக, வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்தினரின் வீடுகள் மற்றும் கோயில்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள், வன்முறையால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஹிந்துக்கள், உடைக்கப்பட்ட சிலைகள், இடிக்கப்பட்ட பந்தல்கள் மற்றும் குளத்தில் வீசப்பட்ட துர்கை சிலைகள் உள்ளிட்ட வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இவ்வழக்கு விசாரணையில், குரான் பிரதியை இக்பால் ஹுசைனிடம் அருகில் உள்ள மசூதி பராமரிப்பாளர்கள் கொடுத்தது பின்னர் தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் காலையில் வன்முறையில் ஈடுபட மக்களைத் தூண்டியதும், ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசியதும் கண்டறியப்பட்டது. ‘இவனை போன்றவர்கள் மீது வங்கதேச நீதிமன்றமும் அந்த நாட்டு அரசும் எந்த அளவுக்கு மென்மைப்போக்கை கடைபிடிக்கிறது என்பதை இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுவதாக உள்ள’து என சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.