சமூக வலைதளங்கள், ஓ.டி.டி தளங்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர். அதில்,
* பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
* அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், பாரத ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை, நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துகளை தடை செய்ய வேண்டும்.
* நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு உத்தரவு கிடைத்த 36 மணி நேரத்தில் ஆட்சேபனைக்குரிய, சட்ட விரோதமான கருத்துகளை சமூக வலைதளங்கள் முடக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும்.
* செய்தியை பரப்பும் முதல் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.
* சைபர் பாதுகாப்பு விசாரணை அல்லது சட்ட விதிமீறலுக்காக, விசாரணை அமைப்புகள் கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும்.
* வாடிக்கையாளர்களின் புகார்களை பெறவும், விசாரணை நடத்தவும் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* சட்டவிரோதம் அல்லது ஆட்சேபனைக்குரிய விஷயங்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
* விதிமீறல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை பெறவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அரசு, நீதிமன்றங்கள் தகவல் கேட்டால் 15 நாளில் சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். வழங்காவிடில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.