ஸ்மார்ட் மூவ்

செய்தி இணையதளங்கள், சமூக ஊடகங்கள், யூடியூப் போன்ற பல்வேறு தளங்களில் இடதுசாரிகளின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. இடதுசாரி ஊடகங்களுக்கு சவால் விடும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நோக்கம்  நல்லதாக இருந்தாலும் அதற்கான முன்னேற்பாடுகள், பக்கபலம், வழிகாட்டுதல், ஒருங்கிணைப்பு போன்றவை இல்லாத்தால் அவர்களால் நோக்கத்தை எட்டமுடியவில்லை. ஊடகங்களில் இடதுசாரிகளின் இந்த ஏகபோகத்திற்கு சவால் விடுக்க சில தேசியவாத ஊடகங்களின் ஒத்துழைப்பால் https://smart4bharat.com  என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்துவதாக சமச்சார் மன்யாட்டா அசோசியேஷன் ஃபார் ரிசர்ச் அண்ட் டிரெய்னிங் (எஸ்.எம்.ஆர்.டி) அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 5ம் தேதி துவங்கப்பட்ட இந்த இணையதளத்திற்கான வேலை, கடந்த  அக்டோபர் 25, 2020 அன்று தொடங்கப்பட்டது.  இந்த 7 மாதங்களுக்குள், இது 60 தேசிய எண்ணம் கொண்ட ஊடக உறுப்பினர்களை இதில் இணைத்தது. இதுவரை 8 கோடி பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர்.