மத்திய அரசு ஊக்குவித்து வரும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ‘புராஜக்ட் 75 இந்தியா’ என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில், ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, மும்பையில் அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் தனியார் நிறுவனமான எல் & டி நிறுவனத்துக்கு விரைவில் ஒப்பந்தம் அளிக்கப்படலாம் என செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த இரண்டு நிறுவனங்களும் ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென் கொரியா ஆகிய 5 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாரதத்திலேயே தயாரிக்கும்.