வீர சாவர்க்கர் எழுதி அச்சிட்ட ஒரு புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்னரே தடைசெய்யப்பட்டது. பாரத தாட்டில், அந்த புத்தகத்தின் பெயர், “முதல் சுதந்திரப் போர்’’ வெளிநாட்டில் அச்சிடப்பட்டு ரகசியமாக சுற்றுக்கு விடப்பட்டது. 1857 ம் ஆண்டு நமது பாரத நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கிளர்ந்தெழுந்து போரிட முனைந்த அருமையான வரலாற்றுத் தருணம் ஆனால், ஆங்கிலேயர்கள் எழுதியுள்ள வரலாற்றில் மேற்படி சம்பவம், சிப்பாய் கலகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கலகம் தென்னாடுகளில் நடைபெறவில்லை என்று பொய் உரைத்து சரித்தரத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதியிருந்தனர் ஆங்கிலேயர்.
ரகசியமாகக் கிடைத்த அந்தப் புத்தகத்தை முழுவதுமாக கையெழுத்துப் பிரதியாக தயார் செய்தார் சிவராம்ஜி.
எதிர்காலத்தில் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முதல் சுதந்திரப் போர் என்பதற்கான ஆதாரங்களை திரட்டிட எண்ணம் கொண்டார். இடையில் படிப்பு, ஆராய்ச்சி, சங்கத்தில் பிரச்சாரக் பணி என தொடர்ந்த வேலை களுக்கிடையே தனது மன ஆர்வத்தை செயல் படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
இதற்காக ஆதாரங்களை சேகரிப்பது மிகவும் அசாதாரணமான காரியம். தென் பகுதிகளில் 1857 காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொகுக்க வேண்டும். எங்கே கிடைக்கும் தகவல்?
தகவல்கள் ஓலைச்சுவடிகளில் இருப்பதைத் தெரிந்து கொண்டார் சிவராம்ஜி. இதற்காக தனது சகோதரியின் மகன் வாசுதேவ் திவேகரை தமிழை விருப்பப் பாடமாக எடுத்து படிக்கச் செய்தார். அவரை தமிழ்நாட்டிற்கு அடிக்கடிவரச் செய்து நடைமுறைத் தமிழையும் கற்கச் செய்தார். மதுரை திருவேடகத்தில் நடைபெற்ற சங்க பயிற்சி முகாமில் 30 நாட்கள் சங்க வஸ்து பண்டார் பகுதியில் பணியாற்றச் செய்தார். வெளி மாநிலத்தவர்; மராத்திக்காரர், தூய தமிழில் பேசுவதை தமிழ்நாட்டு ஸ்வயம் சேவகர்கள் ஆச்சரியத்துடன் கேலியுடனும் பார்ப்பதை நல்ல சந்தர்ப்பமாக்கிக் கொண்டு, அவர்களிடமே நடைமுறைத் தமிழை அறிந்து கொண்டார் திரு திவேகர்.
திவேகர், பிற்காலத்தில் ‘முதல் சுதந்திரப் போரில் தென்பாரதம்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். தென்பாரத மொழிகளிலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதில் சிவராம்ஜியின் பங்கு மிகப்பெரியது. ஆங்கி லேயன் எழுதி வைத்த பொய்யான வரலாற்றை முறியடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது மேற்படி புத்தகம். தமிழில் இந்த புத்தகத்தை டி.கே. ரங்கராஜன் மொழிபெயர்ந்துள்ளார்.
சென்னையில் ஓர் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தருணர் களுக்கான பிரபாத் ஷாகாவில் கலந்துகொள்வேன். ஷாயம் ஷாகா பாலர்களுக்கானது. பாலர் ஷாகாவை ஒரு கிஷோர் (டீனேஜ்) ஸ்வயம்சேவக் நடத்துவார். மாலை 5.30 மணிக்கு தொடங்கும் அந்த ஷாகாவில் அலுலவகப் பணி முடிந்து பேருந்தில் வந்திறங்கி கலந்து கொள்வேன். ஒருநாள் சிவராம்ஜி அந்த சாயம் ஷாகாவுக்கு வந்திருந்தார். அன்று கனத்த மழை பெய்துகொண்டிருந்தது. நான் பேருந்திலிருந்து இறங்கி நனைந்துகொண்டே ஷாகா நடந்த இடத்துக்கு சென்றேன். அங்கே கண்ட காட்சியை என்னைச் சிலிர்க்க வைத்தது. ஷாகா நடந்த இடத்தில் மழைக்கு ஒதுங்க இடம் இல்லாததால் பாலர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றிருப்பார்கள். நாம் மட்டும்தான் ஷாகாவில் நிற்கப் போகிறோம் என்று எண்ணிக்கொண்டே சென்றேன். வழியில் வள்ளலார் சந்நிதி முன்பாக கூறை வேயப்பட்டிருந்த இடத்தில் அனைத்து பாலர்கள், சிசுக்களுடன் சிவராம்ஜியும் நின்றுகொண்டிருந்தார். நகரக் கூட இடமில்லை. நானும் பாதி நனைந்தும் பாதி கூரையிலும் நின்றுகொண்டேன். வள்ளலாரை நோக்கியபடி பிரார்த்தனை முடித்த பிறகு பாலர்களை வீட்டிற்கு செல்லசொல்லி விட்டு நானும் சிவராம்ஜியும் கிளம்பினோம்.
வெளியில் மழை பெய்துகொண்டே இருந்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிவராம்ஜி குடை கொண்டிருவந்திருந்தார். அதை விரித்து என் தலை நனையாமல் பிடித்துக்கொண்டு வந்தார். எனக்கோ சங்கடம். வயதில் பெரியவர் எனக்கு குடை பிடித்துக்கொண்டு வருகிறாரே என்று. நான் முழு பேண்ட் அணிந்துகொண்டு கையில் செருப்பை எடுத்துக்கொண்டு நடந்தேன். அரைக்கால் நிக்கரில் வந்திருந்த சிவராம்ஜி தெருவில் நடக்கத் தொடங்கினார். எனக்குத் தொடை ஈரமாகி குளிரத் தொடங்கியது. சிவராம்ஜியை கவனித்தேன். எந்த சலனமும் இல்லாமல் வெள்ளத்தின் ஆவேசத்தை சகஜமாக சமாளித்தபடி நடந்தார். பிறகு எனக்குச் சொன்னார்; ‘‘கால்களை தரையோடு தரை தேய்த்துக்கொண்டு நட. கால்களைத் தூக்கினால் வெள்ளத்தின் வேகத்தில் நிலைகுலைந்து விழுந்துவிடுவாய்’’. அவரது நுணுக்கமான அறிவை கண்டு வியந்தேன்.
”ஒரு புதிய நபரை சங்கத்திற்கு அழைப்பதில் நம்மிடம் என்னென்ன எதிர்பார்ப்பு இருக்கலாம். அவர் சங்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும். ஸ்வயம்சேவகத் தன்மை அவரிடம் காணப்படும். நமது கருத்துக்கு மாறுபட்டவராக இருக்கக்கூடாது. இப்படியெல்லாம் நாம் நினைத்தால் அது தவறில்லை. ஆனால் இந்த குணங்கள் முழுமையாக அமைந்த ஒரு நபரை சங்கத்திற்கு கொண்டுவருவதில் யாருக்கும் சிரமம் இருக்கப்போவதில்லை. இதோடு நமது பணி நிறைவடைந்துவிடுமா? ஒரு தேச பக்தர் இருப்பார்; ஆனால், அவர் சார்ந்த கட்சி சரியான தலைமை இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளையாகிப்போயிருக்கும். அந்த தேசபக்தர் இருக்கவேண்டிய இடம் ஆர்.எஸ்.எஸ். ஒரு நல்ல பண்பாளர் அவர் தன்னளவில் நல்லவராக வாழ்ந்து வருவார்.
அவரது இடமும் ஆர்.எஸ்.எஸ். ஒருவர் நல்ல ஆன்மிக விஷயங்களில் நல்ல ஈடுபாடு கொண்டிருப்பார். அவர் வாழ்கின்ற சூழல் சமுதாயத்தின் அடுத்த பக்கம் பார்க்கவிடாமல் செய்துகொண்டிருக்கும். அவருக்குத் தேவை ஆர்.எஸ்.எஸ். ஹிந்து சமுதாயம் தன்னை சரிசெய்துகொள்ள ஏற்பாடு இல்லாமல் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்துகொண்டு விகாரம் ஆகிக்கொண்டிருக்கும். இந்த சமுதாயத்திற்கும் தேவை ஆர்.எஸ்.எஸ். தைரியமும் துணிச்சலும் கொண்ட மக்கள் மொழி வாரியாக, மாநில வாரியாக ஜாதி வாரியாக பிரிந்து சமுதாயம் பலமிழந்து போய்கிடக்கும். எதிரிகள் இந்த சமுதாயத்தை தங்களது அடிமையாக்கி வைத்திருப்பார்கள். இவர்களுக்குத் தேவை ஆர்.எஸ்.எஸ்; மகனே உன் சமத்து என்று புத்தியுள்ளவன் எளிதில் பொருள் ஈட்டுவான். ஏழைகளைப் பற்றி சிறிதும் அக்கறைப் படமாட்டான். இவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக மாற்றவேண்டும். இவர்களுக்குத் தேவை ஆர்.எஸ்.எஸ்; இவ்வாறு சமுதாயத்தின் அங்கமாக விளங்கக்கூடிய ஒவ்வொரு வருக்கும் தேவைப்படுவது ஆர்.எஸ்.எஸ்; எனவே இவரைத்தான் சங்கத்திற்கு அழைக்கலாம். மற்றவர்களைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடமுடியாது. மேலே கூறப்பட்ட ஏதாவது ஒரு விஷயம் ஒரு நபரிடம் இருக்குமேயானாலும் கூட அவரை நம்முடன் இணைக்க முற்படவேண்டியது அவசியம். அவரது மற்ற குணங்களினால் ஒதுக்கப்படவேண்டியவர் இல்லை” என்பார் சிவராம்ஜி.