சீதாபூர் வெகுஜன மதமாற்ற மோசடி

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் டிசம்பர் 18 அன்று நூற்றுக்கணக்கான மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாயமாக மாற்ற முயன்றதாக லக்னோவைச் சேர்ந்த பாதிரி டேவிட் அஸ்தானா மற்றும் அவரது மனைவி ரோகினி அஸ்தஹானா மீது சட்ட விரோத மதமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். இவ்ர்களுடன் நான்கு பிரேசில் நாட்டவர்களையும் கைது செய்து, இந்த வழக்கில் அவர்களது பங்கை விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் தற்போது, டேவிட் அஸ்தானா வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை (எப்.சி.ஆர்.ஏ) மீறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அவர் அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில், கென்யா மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து அரசுக்குத் தெரிவிக்காமல் பெரும் தொகையைப் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும், “டேவிட்டின் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்த லட்சக் கணக்கான ரூபாய் பணம் குறித்து அவரிடம் விசாரித்தபோது அதைப் பற்றி அவரால் திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை. இ கேட்வேயைப் பயன்படுத்தி டேவிட் அஸ்தானாவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அதிக அளவில் டெபாசிட் செய்த 12 நன்கொடையாளர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டேவிட் அஸ்தானா நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பட்டய கணக்கரையும் வரவழைத்து இதுகுறித்து விசாரித்து வருகிறோம்.நீதிமன்றத்தில் டேவிட் அஸ்தானாவை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.இந்த வழக்கு தொடர்பாக புதிதக ஒருவரையும் கைது செய்துள்ளோம்.மேலும், உள்ளூர்வாசிகளின் உதவியின்றி டேவிட் இந்த பெரிய மதமாற்றப் பணியைச் செய்திருக்க முடியாது.அதனால்தான் அவர் பல கிராமவாசிகளை தனது உதவியாளர்களாக நியமித்தார்” என சீதாபூரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் கூறினார்.